Tuesday, August 18, 2009

பாஸ்போர்ட் இருநூறு ரூபாய்.. சான்றிதழ் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்

என் முதல் பதிவே இன்று நாட்டில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் பற்றியதாய் அமைந்துவிட்டது.


என் பக்கத்து வீட்டு பெண் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தார்.. சில தினங்களுக்கு முன் வெரிபிகேசனுகாக எங்கள் ஊர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபில் வந்தார்.. அது சமயம் என் பக்கத்து வீட்டில் அந்த தோழியைத் தவிர வேறு யாரும் இல்லை... அந்த போலீச்காரரோ வந்ததிலிருந்தே மிகவும் அதிகாரத் தோரணையிலேயே பேசியிருக்கிறார்... அது கூட பரவாயில்லை.. வெரிபிகேசனுகாக இப்போது என்னிடம் இருநூறு ருபாய் குடுக்கவேண்டும் அப்புறம் ஸ்டேசனுக்கு போய் ஏட்டு ஐயாவை பார்த்து கையெழுத்து போட்டு விட்டு அவரிடம் முந்நூறு ருபாய் குடுத்துடு என்று அதிகாரமாய் கேட்டிருக்கிறார்.. இந்த பெண்ணோ என்னிடம் இப்போது பணம் இல்லை, வீட்டிலும் யாரும் இல்லை, அதனால் ஸ்டேசனுக்கு வரும்போதும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.. அதற்கு அவரோ "பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கி குடு.. நீ ஸ்டேசனுக்கு வரும்போது நீ வருவ வருவன்னு நான் பார்த்துகிட்டா உட்கார்ந்திருக்க முடியும்... இப்போ நீ குடுக்கலைனா இந்த அட்ரசில நீ இல்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிடுவோம்.. அப்புறம் பாஸ்போர்ட் ஆபீசுக்கு நீ திரும்பவும் அலையனும்.. இருநூறு ரூபாய்க்காக பாக்காத... வேலை முடியனுமில்ல" என்று மிரட்டி இருக்கிறார்... இவரும் வேறு வழியின்றி என்னிடம் பணம் வாங்கி கொடுத்தனுப்பி விட்டார். அப்போது நானும் வீட்டில் தனியாகத்தான் இருந்தேன். பெரியவர்கள் யாரேனும் இருந்திருந்தால் கூட அவரை கேள்வி கேட்டிருப்பார்கள். எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. இன்னும் முந்நூறு ரூபாய் அழவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஸ்டேசனுக்கு சென்றார் அந்த தோழி. ஆனால் பிறகுத்தான் தெரிந்தது இந்த கான்ஸ்டபில் கொள்ளைக்கும் ஏட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று. அந்த ஸ்டேசனில் ஏட்டு TVS-50 ல் வருவார். நம்ம கான்ஸ்டபில் splendor ல் ஊருக்குள் வலம் வருவார்.
லஞ்சம் குடுக்கக்கூடாது என்ற எண்ணம் மனதிலிருந்தாலும் இந்த மாதிரி மிரட்டல்களுக்காகவும் நம் வேலை நடக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த அதிகாரப்பிச்சைக்கு அடங்கித்தானே போகவேண்டி இருக்கிறது. இதைப் பற்றி புகார் செய்யலாம் எனத் தோன்றினாலும் நம் வேலை கெட்டுவிடுமே என பயப்படத்தான் வேண்டி இருக்கிறது. எத்தனையோ பேர் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பிக்கிறார்கள். வெறும் வெரிபிகேசனுகாக ஒவ்வொருவரிடம் இருந்தும் இருநூறு ரூபாய் என்றால் அவர் இதுவரையில் எவ்வளவு சம்பாதித்திருப்பார். இது மட்டுமல்ல...


ஒரு நாள் ஒரு டிராபிக் போலிஸ் ஒரு சாலையில் டியூட்டியில் நின்றுகொண்டிருந்தார் . லைசென்ஸ் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய சீருடையோ மிகக்கேவலம். காக்கி கால்சட்டைக்கு பதிலாக கொஞ்சம் வேறு கலரில் கால்சட்டையும், காலில் பூட்சுக்கு பதிலாக செருப்பும் அணிந்திருந்தார். மூத்த அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு தானே இது? மக்களின் மத்தியில் காவல் துறையினரைப் பற்றிய தவறான எண்ணங்கள் மாறவேண்டும் எனின் இந்த அடிப்படை விஷயங்களிலும் அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். கவனிக்குமா காவல் துறை??? காவல் துறையில் மட்டுமல்ல.. எல்லா துறைகளிலுமே இதுதான் நடக்கிறது. ஒரு OBC சான்றிதழ் தருவதற்காக ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். லைசன்ஸ் வாங்க போனால் என்ன நிலை என்று எல்லோரும் அறிந்ததே.. பேசி மட்டும் என்ன மாறப்போகிறது என்கிறீர்களா??? ஏதோ இப்படி பேசியாவது என் ஆதங்கத்தை உங்களிடம் சொல்லலாம் என்றுதான். வாருங்கள் பேசுவோம் இதைப்பற்றி..

14 comments:

  1. மிக நன்றாக எழுதி உள்ளீர்

    About the Passport issue,,

    இந்த மாதிரி அவலங்களை குறைந்த பட்சம் அலை பேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    பின்னாளில் அவன் குடிமி நம்ம கையில :)

    ReplyDelete
  2. நன்றி திரு யூர்கன் க்ருகியர்...

    ReplyDelete
  3. I have had a similar experience when i applied for passport. Police from my town called me to the station instead of checking in my address. And then he told " Give me One hundred rupees" I searched in all my pockets and told " I do not have any money" although i had it. Then he said after a pause " ok. Bring it when you come next time" And I never returned to the station. I got the passport!

    ReplyDelete
  4. நல்லா எழுதியிருக்கீங்க நிலா, எனக்கு போலிஸ்காரனுங்க ன்னாலே பத்திக்கிட்டு வரும்.

    ReplyDelete
  5. குட் போஸ்ட்

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நான் பாஸ்போர்ட் க்காக விண்ணப்பித்திருந்த போது, ஒரு கான்ஸ் முகவரி சோதிக்க வந்தார். நான் தெரு ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன், என்னிடமே வந்து என் முகவரியை விசாரித்தார். நான் தான் அது என்று சொல்லி, ஒரு டீயும் கோல்ட் ஃபில்டர் ஒரு பாக்கெட்டும் வாங்கி கொடுத்தேன். 15 நாளில் பாஸ்போர்ட் கைக்கு வந்தது. 15 வருடம் முன்பு...

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்கள்.

    ஒரு செய்தியை சொல்லும் போது உங்கள் கருத்தையும் தீர்வையும் அதில் பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  8. //ஒரு டீயும் கோல்ட் ஃபில்டர் ஒரு பாக்கெட்டும் வாங்கி கொடுத்தேன். 15 நாளில் பாஸ்போர்ட் கைக்கு வந்தது. 15 வருடம் முன்பு..//

    இப்போ எல்லாம் மாறிப்போச்சுங்க... நூறு ரூபாய் இல்லாம எதுவும் நடக்காது... சமீபத்துல வந்த ஒரு சர்வே படி, இந்தியாவுல 25% மக்கள் தங்களுக்கு வேலை நாடக்கனும்குறதுக்காக லஞ்சம் குடுத்திருக்காங்க... 68% மக்கள் லஞ்சத்தை ஒழிகுரதுக்காக அரசாங்கம் எடுக்குற முயற்சிகள் வீண் வேலைனு நினைக்குறாங்க... 90% மேற்பட்ட மக்கள் காவல்துறையும் அரசியல் கட்சிகளும் தான் லஞ்சம் வாங்குரதுலயே மிக மோசமானஅமைப்புகள்னு நினைக்குறாங்க.. மேலும் 90% மக்கள் இது இன்னும் அடுத்த மூன்று ஆண்டுகள்ல அதிகரிக்கும்னு முழுமையா நம்புறாங்க...
    கடந்த ஆண்டில் மட்டும் 21,068 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கு... அதுல முதல் இடம் கல்வித் துறை.. இரண்டாமிடம் நம்ம காவல் துறை... காவல் துறை மட்டுமே 3,899 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருக்காங்க.. மற்ற துறைகள் எல்லாத்துலையும் நடந்த சிறு சிறு ஊழல்களோட மொத்த தொகை 2.7 பில்லியன்..
    இந்த பணம் எல்லாம் எங்கயோ கருப்பு பணமா முடங்கி கிடக்கு... இன்னமும் நம்ம நாட்டுல வேலை இல்லா திண்டாட்டம் இருக்கு.. ஒரு வேளை கஞ்சிக்கு கூட வழியில்லாம, படுக்குறதுக்கு இடம் இல்லாம எத்தனையோ பேர் இருக்காங்க.. இந்த சர்வே எல்லாத்தையும் சேர்த்தாவே தனி பதிவு போடலாம் போல இருக்கே....

    ReplyDelete
  9. :(

    Corruption from Birth to date.. :(

    ReplyDelete
  10. நிலா இந்தமாதிரி கறுப்பு அவலங்களோடுதானே அவஸ்தைப் படவேண்டியிருக்கு.எங்கள் மக்கள் வெளிநாடுகளுக்கும் கொண்டு வருகிறார்கள் இப்படியான விஷயங்களை.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நல்ல ஆரம்பம்.

    ReplyDelete
  13. பாஸ்போர்ட் ஏன் தான் எடுக்க போகிறோமோ என்று வெறுப்பே வந்து விடும். நம்ம அலுவலர்கள் பண்ணும் அலம்பல்கள்..

    ReplyDelete